அமெரிக்கா உக்ரைனுக்கு சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் முதல்கட்டமாக பாதுகாப்பு சாதனங்களை அனுப்பியுள்ளது. அந்த பாதுகாப்பு சாதனங்கள் தற்போது உக்ரைன் தலைநகர் கிவ்-ஐ சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரஷ்யா தனது படைகளை உக்ரைனின் எல்லையில் நிறுத்தி அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.
அந்த வகையில் அமெரிக்க அரசு கடந்த மாதம் பாதுகாப்பு உதவியினை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி அமெரிக்கா உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை அனுப்பி வைத்துள்ளது. மேலும் தொடர்ந்து உக்ரைனுக்கு தேவையான உதவிகளை நாங்கள் செய்வோம் என்று அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.