தனுஷ் தன்னுடைய முதல் காதல் அனுபவம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக திகழ்பவர் தனுஷ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் யாத்ரா,லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் கூறினர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மாபெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷின் முந்தைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றன. அந்த வரிசையில் தனுஷ் தன்னுடைய முதல் காதல் அனுபவம் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் தனுஷ் “எல்லோருக்கும் காதல் அனுபவம் ஏற்படும் . அந்த வகையில் எனக்கும் ஏற்பட்டது. என்னுடைய முதல் காதல் நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது என்னுள் எட்டிப்பார்த்தது. அதுவரை படிப்பில் கவனம் செலுத்தி வந்த நான் காதலில் விழுந்த பின்னர் படிப்பை முற்றிலுமாக தொலைத்தேன். கடிதங்கள் மற்றும் தொலைபேசிகள் வரை தொடர்ந்த என் காதல் நான் நடிக்க வந்த பிறகு காணாமல் போய்விட்டது. ஆனாலும் என்னால் அந்த காதலை துளியும் மறக்க முடியாது. பசுமை நிறைந்த உணர்வுகளாய் அந்த காதல் ஓடிக்கொண்டே இருக்கிறது..!!” என அவர் கூறியுள்ளார்.