சட்ட விரோதமாக மணல் அள்ளிய 2 வாலிபர்களை பிடித்து கிராம நிர்வாக அலுவலர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள கானாட்டாங்குடியில் கிராம நிர்வாக அலுவலராக ராமநாதன் என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மணல் திருட்டு குறித்து ராமநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர்.
இதனைபார்த்த ராமநாதன் உடனடியாக அவர்கள் 2 பேரையும் பிடித்து தொண்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் அவர்கள் மேல பனையூரை சேர்ந்த செல்வகுமார், முகிழ்தகம் கிராமத்தை சேர்ந்த தாமஸ் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் அனுமதியின்றி மணல் அள்ளியது உறுதி செய்யப்பட்ட பின்னர் காவல்துறையினர் 2 வாலிபர்களையும் கைது செய்துள்ளனர்.