தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்தால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு, தொற்று குறையவில்லை என்றால் முதற்கட்டமாக 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு என்ற அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.