இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி கடந்த 2006ஆம் ஆண்டு திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து அவர் நடித்த தலைநகரம் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவே, சண்டை, வீராப்பு உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். நடிப்போடு மட்டுமல்லாமல் இயங்குவதையும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டே வந்தார். முன்னணி கதாநாயகர்களான ரஜினி கமல் போன்றவர்களின் அருணாச்சலம் அன்பே சிவம் உள்ளிட்ட படங்களை தந்த பெருமை இவரையே சேரும். இதனைத்தொடர்ந்து சினிமாவில் சில சறுக்கல்களை சந்தித்த சுந்தர் சி பின்னர் சில படங்களால் மீண்டும் சினிமாவில் முன்னணி இடத்திற்கு சென்றார். அந்த படங்கள் பற்றிய வரிசையை தற்போது காணலாம்.
முதலாவதாக உலகநாயகனின் நடிப்பில் வெளிவந்த அன்பேசிவம் இந்த படம் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட காதல் மற்றும் அதிரடி கலந்த திரைப்படம் ஆகும். என்னதான் இந்த படம் தோல்வி படமாக இருந்தாலும் சுந்தர் சியின் திறமை இதில் வெளிக்கொணரப்பட்டது. கலகலப்பு என்ற படத்தின் மூலம் மறுபடியும் ரீ என்ட்ரி கொடுத்து செம கலக்கலாக வந்தார் சுந்தர் சி. இந்த படம் முழுவதும் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம் ஆகும். படம் ஓகோ என ஓடி வசூலை அள்ளிக் குவித்தது.
வடிவேலுவின் காமெடி பிரசாந்தின் அதிரடி என மசாலா படமாக அமைந்தது வின்னர் . இந்த படத்தில் வரும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் தற்போது வரை ரசிகர்களால் டிரண்டாக பேசப்பட்டு வருகிறது . இந்த படம் சுந்தர் சிக்கு மாபெரும் வெற்றிப் படம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.