இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. நேற்று இந்த நிலையில் சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 06 ஆயிரத்து 064 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் மேலும் அதிகரித்த அளவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 லட்சத்து 06 ஆயிரத்து 064 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (இது நேற்றைய பாதிப்பை விட 27, 469 குறைவாகும்). இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,95,43,328 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 439 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,89,848 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,43,495 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,68,04,145 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு 22,49,335 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,62,25,19,013 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ள தாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.