அகில இந்திய அளவில் நடைமுறையில் உள்ள ஆட்சிப்பணி விதிமுறைகளில் திருத்தம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அகில இந்திய ஆட்சிப்பணி விதி 1954-ல் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களால் மாநில அரசின் அதிகாரங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதனை கண்டிப்பாக திருத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். . மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள ஒரு சுமுகமான உறவை இது முடிக்கும் வகையில் உள்ளது.
அதோடு மாநில ஆட்சி பணி அதிகாரிகள் மத்திய அரசின் தேவைகளுக்கும் பயன்படுத்த படுவார்கள் எனவும், இதற்கு மாநில அரசு ஒத்துழைக்காத பட்சத்தில் மத்திய அரசு சட்டத்தை கையில் எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது இது மிகவும் ஆட்சேபிக்க கூடிய ஒரு விஷயம் ஆகும். மேலும் பேரிடர்களின் போதும் இயற்கை சீற்றங்களின் போதும் ஆட்சிப்பணி அதிகாரிகள் மாநில அரசுகளின் கீழ் இருந்து சில துரித நடவடிக்கைகள் எடுத்து வருவார். அப்போது அவர்களை மத்திய அரசின் பணிக்கு செல்ல வற்புறுத்துவது அவர்களின் நிலையிலும் மற்றும் நாட்டின் நிலையிலும் சில தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புதிய சட்டத்திருத்தமானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தனித்துவத்தை சீர்குலைக்கும்.
இந்த சட்ட சீர்திருத்தத்திற்கு பல்வேறு மாநில அரசுகள் ஒத்துழைக்கவில்லை எனவே இதனை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாட்டின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறான தேவையற்ற சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு பதிலாக மத்திய அரசு மாநில அரசின் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நேர்மறையான நடவடிக்கை எடுத்து வந்தால் நாடு இன்னமும் சிறந்து விளங்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. மேலே கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இந்திய ஆட்சிப் பணி விதிகளில் மாறுதல்களை கொண்டுவரும் திட்டத்தை கைவிடுமாறும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது குறித்தும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே கைவிடுமாறும் அனைத்து மாநில அரசின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.