ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கு எதுவாக விடுமுறை தினம் என்பதால், ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளன .
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி தடுப்பணையில் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பொதுப்பணித்துறையால் தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று இந்த தடை நீக்கப்பட்டது.
இந்த நிலையில், விடுமுறை தினமான இன்று தடுப்பணையில் குளிப்பதற்கு மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.சுற்றுலா பயணிகளுக்காக அப்பகுதியில் உள்ள கடத்துர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, S .O.S செயலி குறித்து எடுத்துரைத்து,விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவிப்பு கொடுத்து வருகின்றனர்.