Categories
தேசிய செய்திகள்

OMG: உலகளவில் coronavirus பாதிப்பில் முதலிடம் பிடித்த இந்தியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனா மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் தினசரி கொரோணா பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்த அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

நேற்று அமெரிக்காவில் தினசரி பாதிப்பு 7 லட்சமாக இருந்த நிலையில் இன்று இரண்டு லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் இன்று 3.75 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால், கொரோனா பாதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடு அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |