ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து அந்நாடு அதிரடியான தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது அதிபயங்கர தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். இந்த அதிபயங்கர தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தை கருத்தில்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் அதிரடியான தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இனி எந்த வித தனியார் நிகழ்ச்சிகளிலும் ட்ரோன்களை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது.