Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான காடை பெப்பர் மசாலா பாருங்க…!! ருசியுங்க….!!

                                                      காடை பெப்பர் மசாலா

தேவையான பொருட்கள் :

காடை- 4

பெரிய வெங்காயம்- 2

தயிர் -அரை கப்

கொத்தமல்லி -ஒரு கைப்பிடி

புதினா -ஒரு கைப்பிடி

மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்

மிளகுத் தூள்- 2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள்- 1 டேபிள் ஸ்பூன்

உப்பு -தேவைக்கேற்ப

இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்

மிளகாய் தூள்- 1 டேபிள் ஸ்பூன்

மல்லி தூள்- 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் -தேவைக்கேற்ப

Image result for காடை பெப்பர் மசாலா

செய்முறை :

காடையை சுத்தமாக கழுவி விட்டு மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு, கால் கப் தயிர் சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.காடை நன்கு ஊறியதும் எடுத்து ஒரு முறை கழுவிக் கொள்ளவும்.இஞ்சி மற்றும் பூண்டு இரண்டையும் அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கி கரம் மசாலா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு காடையை போட்டு 4 நிமிடம் பிரட்டிய பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பிரட்டவும். 3 நிமிடம் கழித்து மிளகாய் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள், உப்பு போட்டு நன்கு கிளரவும்.அதன் பின்னர் காடையில் எல்லா மசாலாவும் ஒன்றாக சேரும்படி 5 நிமிடம் நன்கு கிளறி விடவும்.

பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி ஒரு தட்டை போட்டு மூடி காடையை 15 நிமிடம் வேக விடவும். இடையில் மூடியை திறந்து பிரட்டி விடவும். 15 நிமிடம் கழித்து தண்ணீர் வற்றி சுருள வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும். மேலே கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

         சுவையான காடை பெப்பர் வறுவல் ரெடி.

Categories

Tech |