Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த குடும்பத்தினர்…. டிப்ளமோ என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

டிப்ளமோ என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உதயராஜபுரம் பகுதியில் மேளக் கலைஞரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர் தந்தையுடன் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை மகன் அரவிந்த் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் முருகனை மீட்டு ராதாபுரம் தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து அரவிந்தை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அரவிந்த் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராதபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தின் உடலை கைப்பற்றி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |