அமெரிக்காவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வசிக்கும் Melissa என்ற 8 வயது சிறுமி நேற்று முன்தினம் அவரின் தாயோடு சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சில மர்ம நபர்கள் ஒரு இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது தவறுதலாக சிறுமி மீது குண்டு பாய்ந்தது. அதன்பிறகு சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே சிறுமி பரிதாபமாக பலியானார். சுடப்பட்ட இளைஞர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.