Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

டிராக்டர்-ஸ்கூட்டர் மோதல்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நிச்சயிக்கப்பட்ட பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கால் கிராமத்தில் வினிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் உறவினரான ஜேம்ஸ்பாண்டு என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இருவரும் சென்னாகுப்பத்தில் இருக்கும் தேவாலயத்துக்கு சென்று விட்டு வந்து கொண்டிருக்கும் போது வினிதா ஸ்கூட்டரை ஓட்டி வர ஜேம்ஸ்பாண்டு பின்னால் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

அப்போது தனியார் கல்லூரி அருகில் வந்த நிலையில் முன்னாள் மின்கம்பிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர் ஓட்டுநர் திடீரென நிறுத்தியதால் வினிதா ஓட்டி சென்ற ஸ்கூட்டர் டிராக்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வினிதாவையும், ஜேம்ஸ்பாண்டையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வினிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து ஜேம்ஸ்பாண்டுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தை ஏற்படுத்தியதாக டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |