குடிபோதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சித்தூர் கிராமத்தில் சிங்காரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிங்காரம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த திருவிழாவை பார்த்து விட்டு குடிபோதையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருக்கும் போது திடீரென சுருண்டு கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சிங்காரத்தை அந்த வழியில் சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.