நூற்பு ஆலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேராளி பகுதியில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான நூற்பு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த நூற்பு ஆலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.