உலகம் முழுக்க கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை புரட்டிப் போட்டு வரும் கொரோனா தொற்று உருமாறி பரவிக்கொண்டிருக்கிறது. உலக அளவில் மொத்தமாக 35,01, 26, 907 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 56, 14, 788 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் தற்போது வரை 27, 98, 52,23 நபர்கள் முழுமையாக கொரோனாவிலிருந்து குணமடைந்து இருக்கிறார்கள். மேலும் உலக அளவில் கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா தான். அங்கு பலி எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியிருக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது.