நடைப்பயிற்சி சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயமாதா நகர் பகுதியில் அமீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புத்துக்கோயில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அண்ணா நகர் அருகில் சென்ற நிலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த ராமர் ரெட்டியூர் பகுதியில் வசிக்கும் பாலமுருகன், அமீன் ஆகியோர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அமீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அமீனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.