Categories
அரசியல் தேசிய செய்திகள்

“இத மட்டுமே செய்யுங்க!”…. நான் உங்களோடு சாப்பிட வருகிறேன்….. -டெல்லி முதல்வர்…!!

டெல்லி முதல்வரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியை ஆதரித்து இணையதளங்களில் வீடியோ போடும் டெல்லி மக்களோடு சேர்ந்து உணவருந்துவேன் என்று கூறியிருக்கிறார்.

உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த மாதம் பத்தாம் தேதியிலிருந்து சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ஆம் ஆத்மி கட்சி, கோவா மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்து நிற்கிறது. இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்த தகவலில், ‘கேஜ்ரிவாலுக்கு ஒரு வாய்ப்பு’ என்னும் தலைப்பில் இன்றிலிருந்து பிரச்சாரம் தொடங்குகிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி செய்த பணிகளையும் வரும் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு தருமாறும் டில்லி மக்கள் இணையதளங்களில் வீடியோ பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இணையதளங்களில் அதிகமாக பகிரப்படும் 50 வீடியோக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் முடிந்த பின் அவர்களுடன் சேர்ந்து இரவு உணவு உண்பேன் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |