சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூரில் ஒரு சில பகுதியில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்வதாக மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி தனிப்படை அமைத்து வாணியம்பாடி முழுவதும் சோதனை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அம்பூர்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்பனை செய்த வெங்கடேசன், வேங்கையன், சுகுமார் மற்றும் ஆறுமுகம் ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.