Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சாலைப்பணிக்காக அடித்தது …. 4 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!

சாலை பணிக்காக அடித்த  மண்ணை திருடிய  4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பைபாஸ் நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக கழனிவாசல் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மண்ணை மர்ம நபர்கள் திருடி செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கழனிவாசல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மணல் அள்ளிக் கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து 2 டிப்பர் லாரி பொக்லைன் எந்திரம் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மண் அள்ளிய சக்தி, முத்துக்குமார், முத்துச்செல்வம், நருவிழிகிருஷ்ணன் ஆகிய 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |