Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட இரண்டு மாதங்களே ஆன நிலையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மட்டும் 30,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாரம் விடுமுறை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகளுக்கு மேலும் விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்படுவது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |