Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துணி துவைக்க சென்ற இடத்தில்…. புரோட்டா மாஸ்டருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலவிநாயகம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாலவிநாயகம் அவரது நண்பருடன் நாசரேத் வெள்ளரிக்காயூரணி புதுகுளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலவிநாயகம் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர் நீச்சல் தெரியாததால் கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அருகிலிருந்த சில வாலிபர்கள் குளத்தில் குதித்து பாலவிநாயகத்தை தேடி பார்த்தனர்.

அப்போது பால விநாயகம் தண்ணீருக்குள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து பாலவிநாயகத்தை மீட்டு நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பாலவிநாயகத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நாசரேத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலவிநாயகத்தின் உடலை கைப்பற்றி சாத்தான்குளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாத்தான்குளம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |