தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் பெற்றோர், காப்பாளர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழு உருவாக்க வேண்டும் என்று ஆதிதிராவிட நல ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
Categories