காரை திருடிக்கொண்டு தப்பியோட திட்டம்போட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள கும்பிடு மதுரையில் அப்துல் வகாப் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது காரை கீழக்கரை சர்வீஸ் ஸ்டேஷன் சாலையில் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் காரை எடுக்க அங்கு சென்றபோது அப்துல் வகாப்பின் கார் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் இருந்து சுமார் 1/2 கி.மீ தொலைவில் உள்ள கருவேலமரத்திற்கு இடையே நின்று கொண்டிருந்துள்ளது.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த அப்துல்வகாப் விசாரித்ததில் கீழக்கரையில் உள்ள சிமெண்ட் கல் தாயரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பீகாரை சேர்ந்த வாலிபர் விஜயகுமார் காரை திருடி பதுக்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்துல் வகாப் கீழக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரித்ததில் காரை திருடி வடமாநிலத்திற்கு தப்பிக்க முயன்றது தெரியவந்துள்ளது.