Categories
மாநில செய்திகள்

மதுரையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து..… பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

கொரோனா பரவல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், திருப்பதி போன்ற ஊர்களுக்குச் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளும், துபாய், சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.

தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் உள்நாட்டு விமான சேவையில் குறைந்தளவு பயணிகள் மட்டும் வருகை தருகின்றனர். இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்களில் குறைந்த அளவு பயணிகளை முன்பதிவு செய்துள்ள காரணத்தினால் விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மதுரை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

Categories

Tech |