ஆந்திராவில் இருந்து சுமார் 1,675 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் பிற மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,675 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டுவரப்பட்டதுள்ளது. இதனையடுத்து ரயில்வே நிலையத்தில் இருந்து சுமார் 80 லாரிகள் மூலம் ரேஷன் அரிசி மூட்டைகளை என்.புதுப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேபோல் உத்தரப் பிரதேசத்தில் இருந்து நாமக்கல்லில் செயல்படும் கோழிப் பண்ணைகளுக்கு தேவையான கோழி தீவனங்கள், தவிடு போன்றவை 1,300 டன் சரக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டுள்ளது. இவைகள் 55 சரக்கு லாரிகள் மூலம் கோழி பண்ணைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.