Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”தொழில் வியாபாரத்தில் தாராள வளர்ச்சி”….. கூடுதலாக வருவாய்…!!

மேஷ ராசி அன்பர்களே..!!! இன்று உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். பொறாமை குணம் உள்ளவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள வளர்ச்சி இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இன்று கோபத்தை தவிர்த்து காரியத்தை நிதானமாக செய்வது ரொம்ப நல்லது. மற்றவரிடம் பேசும்பொழுது ரொம்ப நிதானமாகவே பேசவேண்டும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.

கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.வெளியூர் பயணத்தின் பொழுது கவனமாக இருங்கள். கடந்த காலத்தைவிட இன்று கூடுதலாக வருவாய் இருக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் நல்ல சிறப்பான முன்னேற்றம் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |