Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர் உத்தரவின்படி காவல்துறையினர் கடையநல்லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சேக் மைதீன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சேக் மைதீனை கைது செய்ததோடு அவரிடமிருந்த 1 கிலோ 600 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |