Categories
தேனி மாவட்ட செய்திகள்

உணவு தேடி வரும் விலங்குகள்…. பாலித்தீன் பைகளை தின்பதால் அபாயம்…. வனத்துறையினருக்கு கோரிக்கை….!!

பாலித்தீன் பைகளை தின்று வனவிலங்குகள் உயிரிழப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுரங்கனார் நீர்வீழ்ச்சி, பெருமாள் கோவில் மலை, கழுதைமேடு ஆகிய வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் காட்டுப்பன்றி, மான், குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இச்சூழலில் அப்பகுதியில் வசிக்கும் விலங்குகளுக்கு உணவு மற்றும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் உணவை தேடி வனவிலங்குகள் லோயர்கேம்ப் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி புகுந்து விடுகிறது.

இதனையடுத்து அப்பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திய குப்பைக்கழிவுகள் மற்றும் பாலித்தீன் பைகளை லோயர்கேம்ப் பகுதியில் மொத்தமாக கொட்டி விடுகின்றனர். இந்த குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் உணவு தேடிவரும் வனவிலங்குகள் குப்பைகளில் உள்ள உணவுப் பொருட்களைத் உண்பதுடன், சில நேரங்களில் பாலித்தின் பைகளையும் சேர்த்து தின்று விடுகிறது. இதனால் மான், குரங்குகள் போன்ற வனவிலங்குகள் உயிரிழந்து வருகிறது. எனவே வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |