Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு…”வியாபாரத்தில் கூடுதல் மூலதனம்”…. வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள்…!!

மிதுன ராசி அன்பர்களே…!!! இன்று முக்கியமான செயல்கள் நிறைவேற அனுகூலமான சூழ்நிலை அமைந்து விடும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள்.

புத்தி சாதுரியம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். கணவன் மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டுப் பேசி, அதன் பிறகு செய்வது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கோபத்தை குறைப்பது நல்லது. திருமண முயற்சி வெற்றியை கொடுக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |