அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 40 வயதுடைய ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதில் இவரை அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராவிதமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவர் யார் எந்த ஊரில் வசித்தவர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.