Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் எடுக்க சென்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் செயினை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகம்பியம்பட்டு பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் தனது பசுமாட்டிற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கலைவாணி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.

அப்போது கலைவாணி கூச்சல் போடவே மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது பற்றி கலைவாணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |