குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கும். இதற்கான சிறந்த தீர்வு சேமிப்பு ஒன்றேயாகும். பெற்றோர்கள் தங்கள் வரவில் ஒரு சிறிய தொகையை குழந்தைகளுக்காக சேமித்து வைத்தால் அது எதிர்காலத்தில் பெரிய அளவில் கைகொடுக்கும். அதிலும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை. மத்திய அரசின் உத்தரவாதம் மற்றும் வரிச் சலுகை போன்ற பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. குறுகிய கால முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் திட்டம் சிறந்த பயனாக இருக்கும் சேமிப்பை தொடங்கிய அதே ஆண்டில் பல லட்சங்கள் வரை இந்த திட்டத்தின் மூலமாக சேமிக்கலாம்.
போஸ்ட் ஆபீஸ் ரெகரிங் திட்டத்தில் வட்டியாக 5.8 சதவிகிதம் பெற்றுக்கொள்ளலாம். மாதந்தோறும் 2000 ரூபாய் செலுத்தினால் போதும் இந்தத் திட்டத்தின் முதிர்வு தொகையாக 1.40 லட்சம் வரை பயனாளிக்கு கிடைக்கும். 18 வயதான ஒவ்வொரு இந்திய குடிமகனும் இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கலாம். மேலும் மைனர் குழந்தைகள் இந்த திட்டத்தில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கணக்கின் கீழ் கணக்கு தொடங்கி பயன்பெற வேண்டும்.