பெருவில் கப்பலில் திடீரென ஏற்பட்ட கசிவு காரணமாக 6,000 பேர்லல் எண்ணெய் கடலில் கலந்துள்ள நிலையில் அந்நாடு தெரிவித்த கவலையை போக்கும் விதமாக ஏராளமான தன்னார்வலர்கள் அதனை அகற்ற தங்களது முடியை தானம் செய்துள்ளார்கள்.
பெருவில் கப்பலொன்று சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் கொண்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த 6,000 பேர்லல் எண்ணெய் கடலில் கசிந்துள்ளது. இந்த எண்ணெய் கசிவால் 3 கிலோமீட்டர் கடற்கரை பரப்பு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெருவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சில தன்னார்வலர்களின் உதவியோடு கடலில் கசிந்த எண்ணெய் படலத்தை நீக்குவதற்கு புதிய யுக்தி ஒன்றை கண்டறிந்துள்ளது.
அதாவது கடலில் எழும் அலையில் முடியை கயிறு போல திரித்து விட்டால் அது எண்ணெய் பிசுக்கை உரிந்து விடும் என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சுகாதார அமைச்சகத்தின் இந்த புதிய யுத்தியை கேட்ட சில தன்னார்வலர்கள் தாமாகவே முன்வந்து தங்களது முடியை தானம் செய்து வருகிறார்கள்.