செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பத்து பதினோரு நாளைக்கு முன்னாடி 600 ஆக இருந்தது இன்றைக்கு பார்த்தீங்கன்னா 26,98 1 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு குறிப்பு. அரசாங்க கொடுத்ததுதான் அவ்வளவு. ஆனால் தமிழ்நாடு முழுவதும் பார்த்தீங்கன்னா 40 ஆயிரத்துக்கு இருந்து 50 ஆயிரம் வரைக்கும் இந்த கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதிப்படைந்து இருக்கிறார்கள்.
இதை கட்டுப்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு தவறி விட்டது. சரியான முறையில மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை இதனால் கொரோனாவைரஸ் பரவல் இன்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இதை கட்டுப்படுத்த இந்த அரசு தவறி விட்டது. ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தினந்தோறும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்…
நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தி விட்டோம் என்று…. ஆனால் இன்றைய நிலை என்ன சேலத்தில் மட்டும் நேற்று 775 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இந்த அரசு சரியான நிர்வாகத் திறன் இல்லாத ஒரு அரசாக இருக்கிறது என்பது இதிலிருந்து தெள்ளத் தெளிவாக அறிய முடிகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசு இனிமேலாவது விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.