செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, மாணவி லாவண்யாவை எப்படி வந்து பேசி மதமாற்றம் செய்வதற்காக கட்டாயப்படுத்தி பல பிரச்சினை உண்டாக்கி அவருக்கு கொடுத்தது, அதை பற்றி அவர் தெளிவாக பேசி இருக்கிறார். ஆனால் இதைப்பற்றி நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு வார்த்தை கூட இதுவரைக்கும் பேசவில்லை. ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் முதலமைச்சர் பேசும்போது ஏன் இந்த சிறுமியின் தற்கொலை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, என்ன தடுக்குது ?
ஏன் இதைப் பற்றி பேசுவதற்கு என்ன பயம் ? இதில் உண்மை இருப்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இதைப்பற்றி பேச மாட்டேங்குறார். சிபிஐ விசாரணைக்காக நீங்கள் ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க ? நாங்கள் என்ன கேட்கிறோம் உங்களிடம்… ஒரு குழந்தையைப் பறிகொடுத்து இருக்கிறோம் சிபிஐ விசாரணைக்கு சொல்லுங்க… ஒரு எஸ்பி வந்து இந்த மாதிரி எந்த விஷயமும் நடக்கவில்லை என்று சொல்கிறார், ஒரு தெளிவான வீடியோ இருக்கு. ஆனால் அப்படி இருந்தும் இந்த மாதிரி விஷயங்கள்…
மதமாற்றத்தை பற்றி எந்த விஷயமும் நடக்கவில்லை என்று ஒரு எஸ்பி சொல்லும்போது அந்த எஸ்பி எந்த அளவிற்கு வெளியே பொய் சொல்கிறார். என்றால் அதற்காக அவரை டிஸ்மிஸ் பண்ணாம இருக்கீங்க. ஒரு எஸ்.பிய டிஸ்மிஸ் பண்றதுக்கு உங்களுக்கு என்ன பிரச்சினை. சிபிஐ விசாரணை நாங்கள் கேட்கிறோம் என்றால் அதை பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன பிரச்சனை? மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சிறுமி லாவண்யா பற்றி ஏன் பேசவில்லை ?
அதற்காக அவரிடம் பதில் இருக்கிறதா? ஒவ்வொரு விஷயத்திற்கும் நீங்கள் ஒரு கடிதம் எழுதுகிறீர்கள், ஒவ்வொரு விஷயத்திற்கும் உங்கள் கூட்டணியில் இருக்கின்ற அத்தனை நபர்களும் வாய் திறக்கிறார்கள். ஆனால் இந்த சிறுமி விஷயத்தில் மட்டும் கூட்டணியில் இருக்கிறவர்கள் ஒருவர் கூட பேசவில்லை என தெரிவித்தார்.