செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, அந்தக் குழந்தை சொன்னது போல் கட்டாய மதமாற்றம்… நான் செய்ய மாட்டேன் என்று சொன்னதனால் தான் எனக்கு இவ்வளவு பிரச்சனைகள் உண்டாகி வைத்திருக்கிறார்கள் எனக்கு கல்வி நிலையத்தில்…. ஒரு கல்வி நிலையத்தில் அந்த குழந்தையை யார் ? எந்த வார்டன் வந்து குழந்தைக்கு இவ்வளவு கட்டாயப்படுத்தி நீங்கள் கட்டாயமாக மதமாற்றம் செய்ய வேண்டும் அவர்களின் பெயர் கூட கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், அந்த கல்வி நிலையத்திற்கு எதிராக ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா, இல்ல போலீஸ் வந்து என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அப்போ போலீஸ் இருக்கட்டும், சேகர்பாபு அவர்கள் இருக்கட்டும் அல்லது முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இருக்கட்டும் அந்தக் குழந்தை பேசியது பொய்யா? அந்த குழந்தை பொய் சொல்லிட்டு செத்திருக்கா ?
என்றால் அந்தக் குழந்தை சாகும்போது பொய் சொல்லிட்டு தான் இறந்து போனாளா? என்னுடைய கேள்வி ஒன்று தான… கொஞ்சம் மனசாட்சியுடன் பேசவேண்டும், கொஞ்சம் மனசாட்சியுடன் இருக்க வேண்டும்.. நாம் அரசியல் செய்கிறோம் எல்லாம் சரிதான். நமக்கு பதவி முக்கியம் அதுவும் சரிதான்… அவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு 45 வருடம் கஷ்டப்பட்டு முதல் அமைச்சர் ஆகிருக்கிறார், அவருடைய கனவு நிறைவேறி இருக்கிறது என்றால் நான் அவரை வாழ்த்துகிறேன் ஸ்டாலின் அவர்களை….
ஆனால் கொஞ்சம் மனசாட்சி இருக்க வேண்டும், ஒரு பதவிக்கு வந்துட்டு, ஒரு நிலைமைக்கு வந்துட்டு அதனால மனசாட்சி இல்லாமல் தான் வாழ வேண்டும் என்பது தான் தவறு என்று சொல்கிறேன். மதப் பிரச்சினை என்று தானே அந்த குழந்தையும் சொல்லியிருக்கிறது. குழந்தை வேற என்ன குற்றசாட்டு வைத்திருக்கு. மதமாற்றம் நடக்கவில்லை என்றால் வெளிப்படையாக சொல்ல சொல்லுங்க.
தமிழகத்தில் எந்த மத மாற்றமும் நடக்கவில்லை என்று முதலமைச்சரை சொல்ல சொல்லுங்கள், எத்தனை பேர் வெளியில் வந்து பேசுவார்கள் என்று சொல்லட்டும், எத்தனை கோவில்களை இடித்திருக்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும். நீங்க வெளியில் கட்டாய மத மாற்றம் நடக்கவில்லை முதலமைச்சர் தைரியமாக ஒரு வார்த்தை… அறிக்கை கொடுக்க சொல்லுங்கள். அவருக்கு தைரியம் இருக்கிறதா ? என தெரிவித்தார்.