Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”வியாபாரம் விலகும்”…. குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்….

கன்னி ராசி அன்பர்களே….!! இன்று மனதில் பொறுமை எண்ணம் நிறைந்திருக்கும். எவரிடமும் அளவுடன் பேசி நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சார்ந்த இடையூறு விலகி செல்லும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். சத்தான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். குற்றச்சாட்டுக்கு இன்று ஆளாக நேரிடும். இந்த விஷயத்தில் மட்டும் ரொம்ப கவனமாக இருங்கள். மற்றவர்களின் செய்கையால் கோபம் கொஞ்சம் ஏற்படலாம்.

நிதானம் இருக்கட்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும்.அதன் மூலம் நல்ல வருமானங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். செய்கின்ற வேலையில் நேர்த்தியான சூழல் இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. சரியான முன்னேற்றம் இருக்கும்.

கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |