Categories
அரசியல்

உங்களுக்கு எத்தன!…. எங்களுக்கு எத்தன!…. வேகமா பங்க பிரிங்க!….  கே.எஸ் .அழகிரி சொன்ன முக்கிய தகவல்….!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீடு குறித்து கே.எஸ் அழகிரி கூறியுள்ளார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இன்னும் ஒருசில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தொகுதி பங்கீடு குறித்த வேலைகளில் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் மேலிடம் வரை செல்வதில்லை. அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடமே முடிவெடுக்கப்பட்டு விடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரசின் தொகுதி பங்கீடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பது, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் சார்பில் 15,000 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் தொகுதி பங்கீடு குறித்து எங்களுக்கு எத்தனை இடங்கள் வேண்டும் என்பது குறித்தும் திமுகவிடம் பேசி முடிவெடுக்கப்படும். ஆனால் அந்த முடிவுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் சில நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |