மத்திய அரசு குடியரசு தின விழாவில் எந்தெந்த மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் இடம்பெறலாம் ?என்பதை தீர்மானிக்க பண்பாடு, இசை, கலாச்சாரம், கலை ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நபர்களை கொண்ட குழு ஒன்றை உருவாக்கும். அதன்படி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், மகாகவி பாரதியார், வ.உ.சி. ஆகியோர் அடங்கிய அலங்கார ஊர்தி தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டது.
அதேபோல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை நிறுவப்பட்ட அலங்கார ஊர்தி மேற்குவங்கத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் வல்லுநர் குழு இந்த அலங்கார ஊர்திகளை நிராகரித்தது. பின்னர் இது குறித்து மம்தா, ஸ்டாலின் இருவரும் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினர். இருப்பினும் அமைச்சர் ராஜ்நாத் சிங் உங்கள் அலங்கார ஊர்திகள் குடியரசு தின விழாவில் இடம்பெறாது என்று கூறி கடிதம் ஒன்றை எழுதினார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் மிக்க தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்தி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் மம்தாவும் அதே பாணியை கையில் எடுத்துள்ளார். அதாவது மம்தா கொல்கத்தாவில் ஜனவரி 26-ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி வலம் வரும் என்று கூறியுள்ளார்.