தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர் இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் யாத்ரா,லிங்கா என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிய போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் பிசியாகி விட்டனர். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு என்பது உங்களுக்கு வேண்டுமானால் அதிர்ச்சியானதாக இருக்கலாம். ஆனால் நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்றும் அவர்கள் இருவரும் பிரிய போவதாக ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும் பிள்ளைகள் கொஞ்சம் வளரட்டும் என்றே தங்கள் விவாகரத்தை ஒத்தி வைத்திருந்ததாகவும் அவர்களுடைய நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பத்தில் பிரச்சினை என்று வரும் போதெல்லாம் தனுஷ் புது புது படங்களில் ஒப்பந்தம் ஆகி தன்னுடைய கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வாராம். அப்படி இப்படி என்று நாட்கள் ஓடி தற்போது விவாகரத்து செய்து ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பின்னர் இருவரும் விவாகரத்து செய்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் தனுஷ் தன்னுடைய பிரச்சினை குறித்து யாரிடமும் ஓப்பனாக கூற மாட்டாராம். எனவே அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது குறித்து யாருக்கும் இன்றுவரை தெளிவாக புரியவில்லை. இவ்வாறு அவருடைய நட்பு வட்டாரங்களில் பேசப்படுகிறது.