Categories
சினிமா

“எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல”…. அதுக்கு இதான் சாட்சி….. நடிகர் விஜய் அதிரடி….!!!

நடிகர் விஜய் தனது தாய் சோபாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களை கலக்கி வருகிறது.

நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தோல்விப் பல படங்களையும் தாண்டி வந்த விஜய் தற்போது இந்திய சினிமாவில் பேசப்படும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் இந்த நிலைமைக்கு வருவதற்கு பல அவமானங்களையும் விரக்திகளையும் தாண்டி வர வேண்டி இருந்தது என அவரை ஒரு பேட்டியில் கூறியிருந்தார். விக்ரமன் இயக்கத்தில் பூவே உனக்காக படம் முதன்முதலில் இவருக்கு ஹிட் கொடுத்தது இதனை தொடர்ந்து குஷி, கில்லி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது பீட்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய அப்பா சந்திரசேகர் உடன் கருத்து வேறுபாடு காரணமாக பேச மாட்டார் எனவும் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வது கூட கிடையாது எனவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தனது தாயுடனும் கடந்த சில நாட்களாக பேசமாட்டார், அவரையும் சந்திக்க மாட்டார் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவை அனைத்தும் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் நடிகர் விஜய் தனது தாயுடன் ஒரு புகைப்படம் எடுத்து அதனை இணையதளங்களில் வெளியிட்டுள்ளார் . அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |