Categories
இந்திய சினிமா சினிமா

திரையுலகமே ஷாக்!…. “பிரபல நடிகை ரகசிய திருமணம்?”…. தீயாய் பரவும் செய்தி….!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையான ராஷ்மி கவுதம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் எவரைனா எப்புடைனா, கரண்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ராஷ்மி கவுதம் பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கினார். இதற்கிடையே தெலுங்கு நடிகர் சுடிகள்ளி சுதீரும், ராஷ்மி கவுதமும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் பரவ தொடங்கியது.

ஆனால் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் நடிகை ராஷ்மி கவுதம், தொழில் அதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த செய்தியானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதேசமயம் இந்த தகவல் குறித்து ராஷ்மி கவுதம் மறுப்போ, விளக்கமோ தெரிவிக்காததால் அவருடைய ரகசிய திருமணம் உண்மையாக தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Categories

Tech |