ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் 12 இலக்க அடையாள அட்டை ஆவணமான ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். ஒரு சாதாரண டிக்கெட் முன்பதிவு துவங்கி, கடன் வாங்குவது வரை அனைத்து துறைகளிலும் இந்த ஆதார் அட்டைகள் தேவை அவசியமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு பாதுகாப்பான ஆதார் சேவையான PVC கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த PVC கார்டுகளை ஒவ்வொருவரும் online மூலம் ஆர்டர் செய்து பெற முடியும். இது தொடர்பாக UIDAI தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘PVC ஆதார் அட்டை’ எல்லா இடங்களிலும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தலாம். உங்கள் ஆதார் PVC ஐ இப்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று கொள்ளுங்கள் https://myaadhaar.uidai.gov.in/genricPVC’ என்று குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் இந்த PVC ஆதார் அட்டைகளை விர்சுவல் ID மற்றும் என்ரோல்மென்ட் IDயை உபயோகபடுத்தி onlineல் ஆர்டர் செய்து பெற முடியும். அதற்கான சில எளிய வழிமுறைகளை விரிவாக காணலாம் வாருங்கள்.
- அந்த வகையில் முதலில் UIDAIன் resident.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
- home pageல் ‘ஆர்டர் ஆதார் கார்டு’ என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
- அதன்பின் உங்கள் 12 இலக்க ஆதார் எண் (UID) அல்லது 16 இலக்க மெய்நிகர் அடையாள எண் (VID) அல்லது 28 இலக்க பதிவு ஐடியை உள்ளிட வேண்டும்.
- பாதுகாப்பு குறியீட்டை உள்ளிடவும்
இதனையடுத்து ‘கோரிக்கை OTP’ விருப்பத்தை கிளிக் செய்யவும். - OTP ஐ பதிவு செய்யவும்.
- இதனை தொடர்ந்து ‘விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்’ என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- OTP சரிபார்ப்பை முடிக்க ‘சமர்ப்பி’ என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- இப்போது புதிய பக்கம் திறக்கும்.
- ஆர்டரை வைப்பதற்கு முன் சரிபார்ப்பதற்காக ஆதார் விவரங்கள் தோன்றும்.
- அதன்பின் நீங்கள் பேமெண்ட் வாயிலாக பணம் செலுத்த வேண்டும்.
- இதில் கிரெடிட், டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் UPI மூலம் பணம் செலுத்தி கொள்ளலாம்.
- அதன்பின் எளிதாக பதிவிறக்கம் செய்யக்கூடிய டிஜிட்டல் கையொப்பத்துடன் கூடிய ரசீதைப் பெற முடியும்.
- மேலும் SMS மூலம் கோரிக்கை எண்ணைப் பெறமுடியும்.
- இதன் மூலம் PVC ஆதார் அட்டையின் நிலையைக் கண்காணிக்க முடியும்.