தமிழகத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னை உட்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அதன்படி புதுதாங்கல் பகுதி: முல்லைநகர் த.நா.வீ.வா, குடியிருப்பு, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், பட்டேல் நகர், சாய் நகர், ரெட்டியார் பாளையம், பாரதிநகர், காந்திநகர், குறிஞ்சிநகர் (பகுதி) மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே நகர் / விருகம்பாக்கம் பகுதி: கே.கே நகர், அசோக் நகர், கோடம்பாக்கம், ரங்கராஜபுரம், சாய்நகர், விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்கோவிலூர், அரகண்டநல்லூர், திருப்பாலபந்தல், மணம்பூண்டி அரகண்டநல்லூர், ஜி. அரியூர் மின் வினியோகம் இருக்காது.
பெரம்பலூா்
பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிறுவாச்சூா், தீரன்நகா், அய்யலூா், கவுல்பாளையம், விளாமுத்தூா், நொச்சியம், செல்லியம்பாளையம், நாரணமங்கலம், மருதடி, புதுநடுவலூா், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, பொம்மனப்பாடி, செட்டிக்குளம், நாட்டாா்மங்கலம், காரை ஆகிய கிராமங்களில் இன்று காலை 9.15 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா், வேப்பந்தட்டை, பாலையூா், மேட்டாங்காடு, திருப்பெயா், கே. புதூா், மேலப்புலியூா், நாவலூா் ஆகிய கிராமங்களில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக வந்தவாசி, கீழ்கொடுங்காலூர், மருதாடு, சென்னாவரம், தெள்ளாறு, கீழ்புத்தூர், மாம்பட்டு, நடுக்குப்பம், சத்யவாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதிகள் ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பஸ் நிலையம், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு , ஆர்டர் நகர், காவேரி நகர், எலிசா நகர் நூற்பாலை மாதாகோட்டை சோழன் நகர், தமிழ் பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி ஆலக்குடி மனோஜிபட்டி, ரெட்டிபாளையம் ரோடு, சிங்கப் பெருமாள் குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.
தஞ்சை நகர் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் அழுத்த மின் பாதையில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம் சென்னம்பட்டி மின்நகர் ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அதேபோல ராகவம்பாள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று நடைபெற இருக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூண்டி சாலியமங்கலம் திருபுவனம் மலையர்நத்தம் குடிகாடு செண்பகபுரம் வள்ளியூர் கலஞ்செரி இரும்புத்தலை ரெங்கநாதபுரம் சூரியக் கோட்டை கம்பர்நத்தம் அருந்தவபுரம் வாளமரக்கோட்டை ஆர்சுத்திப்பட்டு அருமலை கோட்டை சின்ன புலி குடிக்காடு நார்த் தேவன் குடிக்காடு அரசப்பட்டு வடக்குந்தம் மூர்த்தியம்பாள்புரம் பாளையங்கோட்டை சடயர்கோவில் துறையுண்டார் கோட்டை ஆகிய ஊர்களில் மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர்
திருப்பூர் குமார் நகர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ராமமூர்த்திநகர், பி.என். ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், எஸ்.வி. காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின்ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர். லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே. புரம், வெங்கடேசபுரம், குமாரனந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடிரோடு, இட்டேரி ரோடு, அருள் ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலைகாலனி, சந்திராகாலனி, முருகானந்தபுரம், எம்.எஸ். நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், மதகுப்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, மதகுபட்டி, திருமலை, அழகமாநகரி, கீழப்பூங்குடி, வீரபட்டி, ஏரியூா், மேலமங்களம், கீழமங்களம், பிரவலூா், பா்மாகாலனி, சிங்கினிபட்டி, தச்சம்பட்டி, ஆபத்தாரன்பட்டி, அரளிக்கோட்டை, நாமனூா், ஒக்கூா், காடனேரி, அலவாக்கோட்டை ஆகிய கிராமங்களிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துணை மின் நிலையம் மூலம் மின் வினியோகம் பெறும் பகுதிகளான திருவில்லிப்புத்தூர் மல்லி, மல்லி புதூர், நாக பாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மானகசேரி, கோப்பை நாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், சித்தாலம்புத்தூர், ராஜா நகர், சிவா நகர், கார்த்திகை பற்றி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
தென்காசி
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர், மங்கம்மாள்சாலை, அச்சன்புதூர் உபமின்நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடை பெறவுள்ளது. இவ்வேளையில பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாபேரி, நாட்டார்பட்டி, ஆவுடையாநூர், வெய்காலிப்பட்டி, சின்னநாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ண நாதபுரம், அடைக்கலபட்டிணம் வடக்கு, வடகரை அச்சன்புதூர், நெடுவயல், வாவநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல்குடியிருப்பு, தென்காசி புதிய பேரூந்துநிலையம், மங்கம்மாள் சாலைபகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டுகாலனி, கீழப்புலியூர் ஆகியஇடங்களில் மின்தடை செய்யப்படும்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. எனவே , இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனங்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், லாயம், நாக்கால்மடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.