Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் தனுஷின் அடுத்த அறிவிப்பு?”…. படு குஷியில் ரசிகர்கள்!…. என்னன்னு பாருங்க….!!!!

கடந்த 18 ஆண்டுகளாக சந்தோசமாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் திடீரென பிரிய போவதாக அறிவித்தனர். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே தனுஷுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தனுஷும் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் திரையுலகை பாதிக்காத வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி என பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். “வாத்தி” படம் தனுஷ் நடிப்பில் வெளியாகும் தெலுங்கு திரைப்படம் ஆகும். மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் “மாறன்” படம் விரைவில் வெளியாக உள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் OTT-யில் வெளியாக உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். ஏனென்றால் தனுஷ் ரசிகர்களுக்கு “மாறன்” திரைப்படம் OTT-யில் வெளியாவதில் விருப்பமில்லை. அதனை திரையில் பார்க்கவே ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது தனுஷ் திரைப்படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த படத்திலிருந்து பாடல் ஒன்று வெளியாக உள்ளது. அந்த பாடத்தை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் அந்த வீடியோ பாடலின் வரிகள் “பொல்லாத உலகம்” என்று தொடங்குமாம். எனவே சோகத்தில் இருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கு தற்போது ஆறுதல் ஏற்படுத்தும் வகையில் இந்த புதிய அப்டேட் உள்ளது.

Categories

Tech |