தமிழ் பட உலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் அவர்தான் நமது தலைவர் ரஜினிகாந்த். இவர் சினிமா உலகிற்கு கொடுத்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கையைப் கணக்கிடவே முடியாது. எண்பதுகளில் தொடங்கி தற்போது வரை அனைவர் மனதையும் ஆட்கொண்டு வருகிறார் சூப்பர்ஸ்டார். இவரது படங்கள் அனைத்தும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது. ஆக்சன் மூவிகளுக்கு பஞ்சமே இல்லாத இவரது சினிமா வரலாற்றில் எந்த படமும் தோல்வியுற்ற தாக சரித்திரமே கிடையாது. அவ்வாறு இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினியின் படங்கள் தோல்வியைத் தழுவி வருகின்றன. இதற்கான காரணம் குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தார் ரஜினிகாந்த். இந்நிலையில் தலைவரின் அடுத்த படம் எப்படியாவது வெற்றி படமாக இருக்கவேண்டும் என ரசிகர்கள் பலர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் வெற்றிப் படத்தில் நடித்துக் கொடுத்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ரஜினி வெறிகொண்டு கதை கேட்டு வருகிறார். நிலையில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து காரணமாக அவர் ஆழ்ந்த மன வருத்தத்தில் உள்ளதால் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா ..? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி பல முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றி கொடுத்த வெங்கட்பிரபு ரஜினியிடம் ஒரு கதை கூறியிருக்கிறாராம். அதோடு விஜயை வைத்து படத்தை இயக்கி வரும் நெல்சன் ரஜினியிடம் ஒரு கதை கூறி இருக்கிறாராம். துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியும் ரஜினியிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறாராம்.