கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் முக்கிய பிரமுகர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
33 வார்டுகள் கொண்ட கிருஷ்ணகிரி நகராட்சியில் 26,910 ஆண் வாக்காளர்கள், 28,520 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 55,431 வாக்காளர்கள் உள்ளனர். சேர்மன் பதவியை பொருத்தமட்டில் ஏற்கனவே பதவியில் இருந்த பரிதா நவாப் மீண்டும் சேர்மன் பதவிக்கு விருப்ப மனு கொடுத்துள்ளார். இவர் ஒன்று மட்டும் 17ஆம் வார்டுகளிலும் போட்டியிடுகிறார். இதேபோல் முன்னாள் மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் கடலரசு தனது மனைவி சாவித்திரிக்கு வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது. சேர்மன் பதவிக்கு மேலும் ஒரு வலுவான போட்டியாளராக செங்குட்டுவனின் மனைவி தமிழ்ச்செல்வி களமிறங்கியுள்ளார்.
அதேபோல் அதிமுகவை பொறுத்தவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக காங்கிரஸ் கூட்டணியை பொருத்தவரை காங்கிரசுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டால் தலைவர் லலித் ஆண்டனியின் அம்மா மரியா அல்போன் சா போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இது போக மற்ற கட்சிகளான பாமக ,நாம் தமிழர் ,மக்கள் நீதி மையம் ,விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றின் மூலம் தனித்தனி வேட்பாளர்கள் சுயேட்சையாக களம் இறங்குகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.