இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து காணாமல் போன 2 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ். எஸ் கோட்டை பகுதியில் சுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகளான நிவேதா அருகில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 -ஆம் தேதி நிவேதா காணாமல் போயுள்ளார்.
இதனால் சுந்தரபாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிவேதாவின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் அவர் சென்னையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சென்னைக்கு சென்ற காவல்துறையினர் நிவேதா மற்றும் அவருடன் இருந்த வெற்றிவேல் ஆகிய இருவரையும் அழைத்து விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்களது காதலை இரு வீட்டாரும் எதிர்த்ததால் சென்னைக்கு ஓடி வந்ததாக நிவேதிதா கூறியுள்ளார்.